செய்திகள்
கூடங்குளம் அணு உலை

கூடங்குளம் அணு உலையில் கதிர்வீச்சு கசிவா? - பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்

Published On 2019-11-20 10:22 GMT   |   Update On 2019-11-20 10:22 GMT
கூடங்குளம் அணு உலையில் இருந்து கதிர்வீச்சி ச்கசியாத அளவில் உலகிலேயே முதல்தரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி இன்று தெரிவித்தார்.
புதுடெல்லி

கூடங்குளம் அணு உலையில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் தகவல்களை சமீபத்தில் பரப்பினர்.

இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி ஞானதிரவியம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார்.

தி.மு.க. எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங்  பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது. கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் அடி தொலைவில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும். அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022-க்குள் முழு கொள்ளளவை எட்டும்.

கூடங்குளம் அணு உலையில் எந்தவிதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது. இணைய தாக்குதல் ஏற்படும்போது அவை அணு உலை பகுதிக்குச் சென்றுவிடாமல் தடுக்க வழிமுறைகள் உள்ளன. மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை கதிர்வீச்சால் பாதிப்பில்லை என தெரிவித்தார்.
Tags:    

Similar News