செய்திகள்
காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் - ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி

Published On 2019-11-19 12:20 GMT   |   Update On 2019-11-19 15:24 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. 49 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2,000க்கும் அதிகமான வார்டு உறுப்பினர்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 2,832 பெண்கள் உட்பட 7,942 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் கட்சி 961, பாஜக 737 , பகுஜன் சமாஜ் கட்சி 16 வார்டுகளிலும் கட்சி பெற்றது. மார்க்சிஸ்ட்  கட்சி 3 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

‘எதிர்பார்த்த முடிவுகள் தான் வந்திருக்கின்றன. அரசாங்கத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மக்கள் ஒரு முக்கியமான முடிவை வழங்கியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்’ என தேர்தல் முடிவுகள் குறித்து ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் மொத்தம் 71.53 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News