செய்திகள்
வெடிவிபத்தில் சிதைந்த பட்டாசு ஆலை.

23 பேரை பலிவாங்கிய குர்தாஸ்பூர் பட்டாசு ஆலை விபத்து- 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Published On 2019-11-19 04:37 GMT   |   Update On 2019-11-19 04:37 GMT
குர்தாஸ்பூர் சட்டவிரோத பட்டாசு ஆலை விபத்தில் 23 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பணியில் அலட்சியமாக இருந்ததாக துணை கமிஷனர் அலுவலக அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குர்தாஸ்பூர்:

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டம் படாலா பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் வெடிவிபத்து ஏற்பட்டது. குடியிருப்புகள் அருகில் நடந்த இந்த விபத்தில் பட்டாசு ஆலை தவிர அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. 

இவ்விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், சட்டவிரோத பட்டாசு ஆலை விஷயத்தில், பணியில் அலட்சியமாக இருந்ததாக குர்தாஸ்பூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சூப்பிரெண்ட், 2 கிளர்க் என மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்தபாக கூடுதல் துணை கமிஷனர் கூறினார். 
Tags:    

Similar News