செய்திகள்
பாராளுமன்றம்

பாராளுமன்ற கேண்டீனில் உணவு கட்டணம் இவ்வளவு தானா?

Published On 2019-11-18 10:22 GMT   |   Update On 2019-11-18 10:22 GMT
பாராளுமன்ற கேண்டீனில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளின் விலைப்பட்டியல் சார்ந்து வைரலாகும் பதிவுகளின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



பாராளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளின் விலைப்பட்டியல் என கூறும் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. விலைப்பட்டியலில் உணவு வகைகளுக்கான விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பாராளுமன்ற உணவகத்தின் விலைப்பட்டியல் வைரலானது. பாராளுமன்ற உணவகத்தின் உணவு விலைப்பட்டியலை செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா தனது ட்விட்டரில் பதிவிட்டார்.



இதனை பலர் தங்களது வலைப்பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனினும், செய்தியாளர் பதிவிட்ட விலைப்பட்டியல் பழையது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த விலைப்பட்டியல் நான்கு ஆண்டுகளுக்கு முன் அமலில் இருந்தது. இந்த விலைப்பட்டியல் மற்ற உணவகங்களை விட குறைந்த விலை கொண்டிருக்கின்றன.

சமூக வலைத்தளத்தில் வைரலான பாராளுமன்ற விலைப்பட்டியல் டிசம்பர் 2015 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு, புதிய விலைப்பட்டியல் ஜனவரி 1, 2016 முதல் அமலாக்கப்பட்டது. புதிய விலைப்பட்டியலில் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில் வைரலாகும் உணவு விலை பட்டியல் பழையது என உறுதியாகியுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News