செய்திகள்
பாராளுமன்றம்

மக்களவையில் இருந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வெளிநடப்பு

Published On 2019-11-18 08:44 GMT   |   Update On 2019-11-18 11:30 GMT
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, விவசாயிகள் பிரச்சினைகளுக்காக மக்களவையில் இருந்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் மற்றும் தற்போதைய எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டதும் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை தொடர்ந்து நடைபெற்றது. 

மகாராஷ்டிராவில் விவசாயிகள் படும் கஷ்டங்கள் இன்று மக்களவையில் எதிரொலித்தது. இந்த பிரச்சினையை எழுப்பிய சிவசேனா எம்பிக்கள், இந்த விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்பிக்களும் இதே கோரிக்கையை முன்வைத்து வெளிநடப்பு செய்தனர்.

முன்தாக, ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக காங்கிரஸ், திமுக மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர்.

இதேபோல் பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், காஷ்மீர் மாநில பிரிவினைக்கு பின்னர் அங்கு தொடர்ந்து அரசியல் தலைவர்கள் சிறைவைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தில்  பிரச்சினைகளை கிளப்ப உள்ளன.
Tags:    

Similar News