செய்திகள்
உத்தவ் தாக்கரே அஞ்சலி

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே நினைவுநாள்: உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி

Published On 2019-11-17 09:22 GMT   |   Update On 2019-11-17 12:21 GMT
சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே நினைவுநாளான இன்று அவரது நினைவிடத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மும்பை:

பால் தாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே  இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மகாராட்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவசேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவிய தலைவர் ஆவார்.

அரசியல் ரீதியாக, சிவசேனா பொதுவுடைமைக் கட்சிக்கு எதிரானதாக விளங்கி, மும்பையின் பிரதான வர்த்தகத் தொழிலாளர் சங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிடமிருந்து பறித்து, பெரும்பாலும் குஜராத்தி மற்றும் மார்வாடி வணிகத் தலைவர்களிடமிருந்து காப்புப் பணம் வசூல் செய்வதாகவே இருந்தது.

பின்னர், பாரதிய ஜனதா கட்சியுடன் சிவசேனா கூட்டு ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி-சிவசேனா கூட்டணி 1995-ம் வருடம் மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது.

1995 முதல் 1999வது வருடம் வரை இந்த அரசு ஆட்சிப்புரிந்த காலகட்டத்தில் பால் தாக்கரேயை "தொலைவிலிருந்து இயக்குபவர்" என்று அடைபெயர் இட்டு அழைத்தனர். இதன் காரணம் அவர் அரசின் கோட்பாடுகள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு பெரும்பங்கு ஏற்றதேயாகும்.

வேறு மாநிலங்களிலிருந்து மும்பை நகரில் குடியேறுபவர்கள், இந்து-அல்லாதவர்கள்  மற்றும் வங்காள தேசம் நாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் ஆகியோரை எதிர்ப்பதில் தாக்கரே மிகவும் வெளிப்படையாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு வந்தார்.



1960-ம் ஆண்டுகளின் இறுதிப்பகுதிகளில் துவங்கி 1970-ம் ஆண்டுகளின் இடைக்காலம் வரையிலும் "மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கே" என்ற தமது பிரசாரத்தின் ஒரு பகுதியாக தென் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் மும்பையை விட்டு வெளியேறாவிட்டால் அவர்களுக்குத் தீங்கு விளையுமென்று தாக்கரே அச்சுறுத்தி வந்தார்.

இந்நிலையில், வயோதிகம் சார்ந்த உபாதைகளான மூச்சுத்திணறல், மலச்சிக்கல் பாதிப்புக்காக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால் தாக்கரே 2012-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி மாரடைப்புக் காரணமாக உயிரழந்தார்

இந்நிலையில், பால் தாக்கரேவின் 7-ம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது மகனும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News