செய்திகள்
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

பாரளுமன்ற சபாநாயகர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

Published On 2019-11-16 14:50 GMT   |   Update On 2019-11-16 14:50 GMT
பாரளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை அமைதியாக நடத்த உதவுமாறு அனைத்து கட்சிகள் கூட்டத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

பாரளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரை எந்தவித இடையூறுகளும் இல்லாத அளவிற்கு அமைதியாக நடத்துவது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதிர் ரஞ்சன் சௌதிரி, இந்திய மஜ்லிஸ்-ஈ- இத்கதுல் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி ,  திமுக சார்பில் டி.ஆர். பாலு, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். 

இதில் பாரளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை அமைதியாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டுமென சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். 



இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓம் பில்லா ‘தனது வேண்டுகோளை ஏற்று பாரளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் தங்கள் ஆதரவை தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளது’ என தெரிவித்தார். 

இதற்கிடையில், திங்கள் கிழமை தொடங்க உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, காற்றுமாசுபாடு, ரபேல் விவகாரம் போன்ற பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் தீர்மானித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News