செய்திகள்
திவ்யான்ஷி சங்கல்

கூகுள் டூடுல் போட்டியில் வெற்றிபெற்ற 7 வயது சிறுமி

Published On 2019-11-15 14:56 GMT   |   Update On 2019-11-15 14:56 GMT
தேசிய அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் போட்டியில் 7 வயது சிறுமி வரைந்த படங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சண்டிகர்:

இந்தியாவில் படிக்கும் பள்ளி மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம், வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்துகிறது. 

படைப்பாற்றலும், வரைதலில் ஈடுபாடும் கொண்டுள்ள இந்திய மாணவர்களுக்காக கூகுள் நடத்தும் போட்டி தான் ‘டூடுல் 4 கூகுள்’. இந்தியாவைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.



இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கான‘டூடுல் 4 கூகுள்’ போட்டியில் இந்தியாவின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். 

இந்த போட்டியில் அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் திவ்யான்ஷி சங்கல் என்ற 7 வயது சிறுமி  ‘எதிர்காலத்தில் நகரும் மரங்கள்’ என்ற தலைப்பில் வரைந்த படங்கள் முதல் இடம் பிடித்துள்ளது.
Tags:    

Similar News