செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

சபரிமலை விவகாரம்- முந்தைய தீர்ப்பை முறையாக அமல்படுத்த நீதிபதி அறிவுறுத்தல்

Published On 2019-11-15 07:31 GMT   |   Update On 2019-11-15 07:47 GMT
சபரிமலை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவை முறைப்படி அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு வக்கீலை அழைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாரிமன் அறிவுறுத்தினார்.
புதுடெல்லி:

சபரிமலை வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளின் நேற்றைய தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக தகவல் வெளியானதால் இன்று (வெள்ளிக்கிழமை) இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நாரிமன் விளக்கம் அளித்து கூறியதாவது:-


சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் வழிபாடு செய்வதற்கு எந்த தடையும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக அளித்துள்ள உத்தரவு மாற்றப்படவில்லை. எனவே பெண்கள் தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வழிபடலாம்.

சுப்ரீம்கோர்ட்டின் இந்த உத்தரவை கேரள மாநில அரசு முறையாக அமல்படுத்த வேண்டும். சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்தாமல் இருப்பதை எங்களால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறு நீதிபதி நாரிமன் கூறினார்.

அவர் மத்திய அரசின் வக்கீல் துஷார் மேத்தாவை அழைத்து சபரிமலை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவை முறைப்படி அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News