செய்திகள்
நீரில் மூழ்கி பலி (மாதிரி படம்)

கார்த்திகை பூர்ணிமா- புனித நீராடியபோது 3 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி பலி

Published On 2019-11-12 04:40 GMT   |   Update On 2019-11-12 04:40 GMT
பீகார் மாநிலம் நாளந்தாவில் கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு ஆற்றில் புனித நீராடியபோது 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
நாளந்தா:

வடமாநிலங்களில் இன்று கார்த்திகை பூர்ணிமா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்து, சீக்கிய மற்றும் ஜெயின் மதத்தினரால் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய அம்சமாக, நாடு முழுவதிலும் புனித தலங்களில் உள்ள ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுகின்றனர். இதற்காக நீர்நிலைகளில் ஏராளமானனோர் திரண்டுள்ளனர். 

புனித நீராடலையொட்டி கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் விபத்து பற்றிய தகவல்கள் வருகின்றன. 

பீகார் மாநிலம் பவபுரியில் உள்ள நதியில் கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு ஏராளமானோர் புனித நீராடினர். ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தவர்களில் 3 குழந்தைகள் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். பின்னர் உடல் அடையாளம் காணப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News