செய்திகள்
ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கம் போராட்டம்

கட்டண உயர்வை கண்டித்து டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கம் போராட்டம்

Published On 2019-11-11 08:23 GMT   |   Update On 2019-11-11 08:23 GMT
நாட்டின் பிரசித்தி பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் கட்டண உயர்வு மற்றும் உடை கட்டுப்பாட்டை கண்டித்து இன்று போராட்டத்தில் குதித்தது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற  பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் ஒரு மேயர் தேர்தலுக்கு இணையாக டெல்லி மக்களின் கவனத்தை ஈர்ப்பதுண்டு.

இந்நிலையில்,  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் சமீபத்தில் அறிவித்த கட்டண உயர்வு, ஆஸ்டல்களில் தங்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை மற்றும் உடை கட்டுப்பாடு தொடர்பான விதிமுறைகளை கண்டித்து மாணவர்கள் சங்கம் இன்று போராட்டத்தில் குதித்தது.



அந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று பங்கேற்று உரையாற்றவுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் பட்டமளிப்பு விழா அரங்கத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

எனினும், வாசலில் நின்றவாறு தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர் பங்கேற்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

டெல்லியில் நெரிசல் மிகுந்த முக்கிய சாலையில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் வாகனங்களின் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News