செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களின் கட்டணத்தை ஏற்க டெல்லி அரசு முடிவு

Published On 2019-11-08 11:47 GMT   |   Update On 2019-11-08 11:47 GMT
டெல்லியில் இருந்து கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களின் கட்டணத்தை ஏற்க முதல் மந்திரி கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

கர்தார்பூர் பாதை திறப்பு விழா மற்றும் குருநானக் தேவ் பிறந்தநாளின்போது இந்திய யாத்ரீகர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவித்த பாகிஸ்தான் அரசு தற்போது பின்வாங்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களின் கட்டணத்தை ஏற்க முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 

ஏற்கனவே, தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி தீர்த்த யாத்திரை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 12 புனித தலங்களுக்கு யாத்ரீகர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News