செய்திகள்
மாஸ்க் அணிவிக்கப்பட்ட சிவலிங்கம்

அச்சுறுத்தும் காற்று மாசு- சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிவித்த பூசாரிகள்

Published On 2019-11-07 09:10 GMT   |   Update On 2019-11-07 09:10 GMT
வாரணாசியில் காற்று மாசுவில் இருந்து பாதுகாக்க சிவலிங்கத்திற்கு பூசாரிகள் மாஸ்க் அணிவித்து வழிபட்டனர்.
வாரணாசி:

டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அபாய அளவைத் தாண்டியது. காற்று மாசைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காற்று மாசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பலர் மாஸ்க் அணிந்து வெளியில் செல்வதைக் காண முடிகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு கோவிலில் சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிந்து வழிபட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.

வாரணாசி தர்கேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பூசாரிகள் மாஸ்க் அணிவித்து பூஜை செய்தனர். காற்று மாசுவில் இருந்து சிவன் பாதுகாக்கப்பட்டால், மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என பூசாரிகள் கூறினர். பூசாரிகளும் மாஸ்க் அணிந்திருந்தனர்.

இதேபோல் வாரணாசியின் சிக்ரா பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிவன், பார்வதி சிலைகளுக்கும் மாஸ்க் அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News