செய்திகள்
காங்கிரஸ்

பொருளாதார மந்த நிலையை கண்டித்து காங். தலைமையில் டிசம்பர் 1-ல் ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-06 10:36 GMT   |   Update On 2019-11-06 10:50 GMT
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலையை கண்டித்து தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் டிசம்பர் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
புதுடெல்லி:

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
 
வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக சரிந்தது.

பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் இந்த 8 துறைகளின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 2.1 சதவீதம் மட்டுமே இருக்கிறது.

இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலையை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் டிசம்பர் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக தலைமையிலான மத்திய அரசில் நிலவும் பொருளாதார மந்த நிலையை கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Tags:    

Similar News