செய்திகள்
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்

ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் - ‘நாணாமை நாடாமை’ குறளை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு

Published On 2019-11-05 22:41 GMT   |   Update On 2019-11-05 22:41 GMT
தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒரு குறளை இயற்றினார் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒரு குறளை இயற்றினார் என்று தோன்றுகிறது.

“நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்”

இதன் விளக்கம், தீமைக்கு வெட்கப்படாது இருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாது இருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாது இருப்பது, காக்க வேண்டிய எதையும் காக்காமல் இருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்
Tags:    

Similar News