செய்திகள்
சிறுமியை மீட்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்படுகிறது

அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி- மீட்பு பணி தீவிரம்

Published On 2019-11-04 03:44 GMT   |   Update On 2019-11-04 03:44 GMT
அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சண்டிகர்:

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள்.

இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்கும் பணியை தொடங்கினர்.



50 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் சிறுமி இருக்கும் ஆழம் வரை பள்ளம் தோண்டியதும்,  பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி, சிறுமியை மீட்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. 
Tags:    

Similar News