செய்திகள்
ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

காஷ்மீரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்கு 44 ஆயிரம் வாலிபர்கள் முன்பதிவு

Published On 2019-11-04 01:10 GMT   |   Update On 2019-11-04 01:10 GMT
காஷ்மீரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்காக இதுவரை 44 ஆயிரம் வாலிபர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
ஜம்மு:

காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களான சம்பா, ஜம்மு, கதுவாவை சேர்ந்த வாலிபர்களுக்காக சம்பாவில் நேற்று முதல் வருகிற 12-ந்தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்கு இந்த மாவட்டங்களை சேர்ந்த வாலிபர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிக எண்ணிக்கையில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த முகாமுக்காக இதுவரை 44 ஆயிரம் வாலிபர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் நேற்று முதல் நாளில் மட்டுமே 3 ஆயிரம் பேருக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் இளைஞர்களின் ஆர்வத்தை பார்த்து ராணுவ அதிகாரிகளே மிகுந்த ஆச்சரியத்தில் உறைந்தனர்.

இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு, மிகுந்த வெளிப்படையாக நடத்தப்படும் எனவும், வாலிபர்கள் யாரும் இடைத்தரகர்களை நாட வேண்டாம் எனவும் ஜம்மு பிராந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் தேவேந்திர ஆனந்த் கூறினார்.
Tags:    

Similar News