செய்திகள்
ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவை அளித்துள்ளது - தூதர் பேச்சு

Published On 2019-11-02 11:37 GMT   |   Update On 2019-11-02 11:37 GMT
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா தனது முழு ஆதரவை அளித்துள்ளது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
 
இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி காஷ்மீர் இனிமேல் மாநிலம் இல்லை. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்துவிட்டது.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா தனது முழு ஆதரவை அளித்துள்ளது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தனது வீட்டில் நேற்று தீபாவளி விருந்து அளித்தார். இதில் அமெரிக்கவாழ் இந்தியர்கள், டிரம்ப் அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.   

இதுதொடர்பாக ஷ்ரிங்க்லா கூறுகையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா தனது முழு ஒத்துழைப்பை அளித்துள்ளது. இதுபோன்ற புதிய மற்றும் வலுவான முயற்சியை இதற்கு முன் யாரும் முன்னெடுக்கவில்லை. இந்தியாவின் இத்தகைய முயற்சிக்கு அமெரிக்க பாராளுமன்ற எம்.பி.க்கள் தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளனர் என்றார்.
Tags:    

Similar News