செய்திகள்
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா சட்டசபை சிவசேனா தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு

Published On 2019-10-31 10:07 GMT   |   Update On 2019-10-31 10:07 GMT
மகாராஷ்டிரா மாநில சட்டசபை சிவசேனா தலைவராக ஏக்நாத் ஷிண்டே நியமனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றியது. தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையிலும் அங்கு இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை. பாஜக, சிவசேனா கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

அங்கு மொத்தம் உள்ள 288 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க.வுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

இதனால் கூட்டணி ஆட்சி உடனடியாக அமைந்து பா.ஜ.க. முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சிவசேனா கட்சி தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருவதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அப்போது சிவசேனா இளைஞரணி தலைவரான ஆதித்யா தாக்கரே சிவசேனா சட்டசபை தலைவராக ஏக்நாத் ஷிண்டேவை நியமனம்  செய்தார்.
Tags:    

Similar News