செய்திகள்
மகா புயல்

அரபிக் கடலில் உருவான மகா புயல்

Published On 2019-10-30 17:04 GMT   |   Update On 2019-10-30 17:04 GMT
அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் உள்ள நிலையில், தற்போது புதிதாக மகா புயல் உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கன்னியாகுமரி அருகே அரபிக்கடலில் ஏற்கனவே கியார் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில், அரபிக் கடலில் தற்போது உருவான புயலுக்கு 'மகா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், லட்சத்தீவு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அரபிக் கடலில் தற்போது உருவான புயலுக்கு 'மகா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் மகா புயல் நிலைகொண்டுள்ளது. இந்த புயலானது நாளை தீவிர புயலாக மாறும். இதனால் புயல் காற்றின் வேகம் மணிக்கு 95 கி.மீ. முதல் 110 கி.மீ. ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News