செய்திகள்
பிரதமர் மோடி பேசிய காட்சி.

பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு மோடி இல்லத்தில் தீபாவளி விருந்து

Published On 2019-10-30 14:59 GMT   |   Update On 2019-10-30 14:59 GMT
டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பணியார்களுடன் இன்று தனது இல்லத்தில் கலந்துரையாடல் நடத்திய பிரதமர் மோடி தீபாவளி விருந்து அளித்தார்.
புதுடெல்லி:

இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையை காஷ்மீர் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, மறுநாள் சவுதி அரேபியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

சவுதியில் இருந்து இன்று தாயகம் திரும்பிய நரேந்திர மோடி, இன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமரின் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுடன் இன்று தனது இல்லத்தில் கலந்துரையாடல் நடத்திய பிரதமர் மோடி தீபாவளி விருந்து அளித்தார்.

அப்போது, தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து அதிகாரிகளிடையே உரையாற்றிய மோடி, பிரதமர் அலுவலகத்தின் செயல்பாடுகள் நாட்டின் அனைத்து அரசு துறைகளுக்கும் முன்மாதிரியாக உள்ளதாக பெருமிதமாக குறிப்பிட்டார்.

இந்த நற்பணிகளுக்காக ஒட்டுமொத்தமாக பிரதமர் அலுவலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர், மாற்றத்துக்கான மத்திய அரசின் அனைத்து பணிகளும் உங்களது விடாமுயற்சிகளால் தான் நிறைவேறின எனவும் கூறினார்.

இந்தியா விடுதலை பெற்ற 75-வது ஆண்டான வரும் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த கடமைகளை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய மோடி, வருங்காலத்தில் கடந்த ஆண்டில் என்னென்ன அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது என்பதை மனதில் இருத்தி வரும் ஆண்டில் புதிய உயரங்களை எட்டும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News