செய்திகள்
பல வகை இனிப்புகள்.

வீடியோ: குஜராத்தி புத்தாண்டில் 3500 வகை இனிப்பு, பலகாரங்களுடன் சாமிக்கு மெகா படையல்

Published On 2019-10-28 15:44 GMT   |   Update On 2019-10-28 15:45 GMT
குஜராத்தி புத்தாண்டையொட்டி சுவாமி நாராயன் கோவிலில் உள்ள தெய்வங்களின் சிலைகளுக்கு 3500 வகையான இனிப்பு, பலகாரங்களுடன் பிரமாண்டமாக படையல் வைக்கப்பட்டது.
காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் வைணவ மரபுகளை பின்பற்றி வாழும் இந்து மக்களின் மகாகுருவான ராமானந்த் சுவாமியால் விசிட்டாத்துவைதம் தத்துவம் சுவாமி நாராயன் என்ற மகானுக்கு அருளப்பட்டது.

விசிட்டாத்துவைதம் (விசிஷ்டாத்வைதம்) என்பது காலத்தால் பழமைவாய்ந்து, பின்னர் வந்த வைணவ மகாச்சாரியராகிய இராமானுசரால் புகழ்பெற்ற தத்துவம் ஆகும். பிரம்ம சூத்திரம், பகவத் கீதை முதலியவற்றிற்கு தமது விசிட்டாத்துவைதக் கொள்கைப்படி உரை எழுதினார். சிறப்புநிலையான அத்வைதம் (இரண்டன்மைக் கொள்கை) என்பது இதன் பொருள் (விசிஷ்ட (சிறப்பு) + அத்வைதம் (இரண்டன்மை) = விசிஷ்டாத்வைதம்= விசிட்டாத்துவைதம்).

இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம் (துவைதம் அற்ற நிலை), (இரண்டற்ற ஒருமை நிலை)நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு, மழை நமக்குள், நம்மால் இயங்குவது இல்லை, - என எண்ணி இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பார்ப்பது துவைதம். இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஒப்புக்கொள்வது விசிட்டாத்துவைதம்.

18-ம் நூற்றாண்டு காலத்தில் இந்த தத்துவத்தை பரப்பிய சுவாமி நாராயன் குஜராத் மக்களால் தெய்வமாக மதித்து போற்றப்படுகிறார். இவருக்கு அம்மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளன.

இந்நிலையில், குஜராத்தி புத்தாண்டையொட்டி அங்குள்ள வதோதரா நகரில் சுவாமி நாராயன் கோவிலில் உள்ள தெய்வங்களின் சிலைகளுக்கு 3500 வகையான இனிப்பு, பலகாரங்களுடன் பிரமாண்டமாக படையல் வைக்கப்பட்டது.

இதேபோல், சூரத் நகரில் இன்று 1300-க்கும் அதிகமான இனிப்பு வகைகள் மற்றும் பலகாரங்கள் படைக்கப்பட்டது.


Tags:    

Similar News