செய்திகள்
கோப்பு படம்

மகாராஷ்டிரா: வெற்றி பெற்ற 105 பாஜக எம்.எல்.ஏ.க்களில் 100 பேர் கோடீஸ்வரர்கள்

Published On 2019-10-26 14:07 GMT   |   Update On 2019-10-26 14:07 GMT
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற 105 எம்.எல்.ஏ.க்களில் 100 பேரும், காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களில் 42 பேரும் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 

தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி ஒரு தொகுதியிலும், மற்ற கட்சிகள் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

இதையடுத்து அதிக தொகுதிகளை கைப்பற்றிய பாஜக-சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 



இந்நிலையில், மகாராஷ்டிரா தேதலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களில் கோடீஸ்வரர்கள் எத்தனை பேர்? என்பது குறித்த ஆய்வு ஜனநாயக புணரமைப்பு சங்கத்தின் சார்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின் முடிவுகளின்படி, பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 105 எம்.எல்.ஏ.க்களில் 100 பேர் கோடீஸ்வரர்கள், சிவசேனா கட்சி சார்பில் வெற்றிபெற்ற  55 எம்.எல்.ஏ.க்களில் 51 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற 53 எம்.எல்.ஏ.க்களில்  47 பேர் கோடீஸ்வரர்கள் மற்றும் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற 44 எம்.எல்.ஏ.க்களில் 42 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News