செய்திகள்
பிரியங்கா காந்தி

உ.பி. மந்திரி மீது பிரியங்கா குற்றச்சாட்டு

Published On 2019-10-25 08:45 GMT   |   Update On 2019-10-25 08:45 GMT
கங்கொஹ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் முன்னிலையை குறைக்கும்படி பா.ஜனதா அமைச்சர் மிரட்டி உள்ளார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில் கங்கொஹ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் முன்னிலையை குறைக்கும்படி பா.ஜனதா அமைச்சர் மிரட்டி உள்ளார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற முன்னிலையை குறைத்து கூறும்படி பா.ஜனதா அமைச்சர் ஒருவர் மாவட்ட கலெக்டருக்கு 5 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இத ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயலாகும்.

பா.ஜனதா ஆணவத்துடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் முடிவை மாற்றுவதற்கு பா.ஜனதா முயற்சிக்கிறது. அத்தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் 5000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை வெளிக்கொண்டு வர உத்தரபிரதேச காங்கிரஸ் கடுமையாக போராடும். இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News