செய்திகள்
துஷ்யந்த் சவுதாலா

அரியானாவில் ஆட்சியமைப்பது யார்?- எம்.எல்.ஏ.க்களுடன் ‘கிங்மேக்கர்’ சவுதாலா இன்று ஆலோசனை

Published On 2019-10-25 04:04 GMT   |   Update On 2019-10-25 04:04 GMT
அரியானா மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கிங்மேக்கராக உருவெடுத்துள்ள துஷ்யந்த் சவுதாலா, இன்று தனது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சண்டிகர்:

அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 90 தொகுதிகள் கொண்ட அரியானாவில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

பாஜக 40 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வென்றது.  துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜன்நாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளை பிடித்து, மூன்றாவது பெரும் கட்சியாக உள்ளது. சுயேட்சைகள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மாநிலத்தில் யார் ஆட்சியமைப்பது என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக துஷ்யந்த் சவுதாலா பார்க்கப்படுகிறார். இதேபோல் 7 சுயேட்சைகளின் பங்கும் முக்கியமானது. 

ஜன்நாயக் ஜனதா கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமா, காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. 



இந்நிலையில், ஜன்நாயக் ஜனதா கட்சியின் 10 எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாரா இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆட்சியமைக்க எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பதை முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாஜக தலைவர் அமித் ஷாவை துஷ்யந்த் சவுதாலா சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பாஜகவும், ஜன்நாயக் ஜனதா கட்சியை தங்களுடன் இணைத்து ஆட்சியில் சமபங்கு கொடுக்க விரும்புவதாக தெரிகிறது. இந்த எம்எல்ஏக்களில் பலர் பாஜகவில் இருந்து அதிருப்தியில் வெளியேறியவர்கள் என்றபோதிலும், சுயேட்சைகளை சார்ந்திருப்பதை குறைக்க இந்த முயற்சி உதவும் என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது. 
Tags:    

Similar News