செய்திகள்
கோப்பு படங்கள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் லாரி டிரைவர்கள் சுட்டுக்கொலை

Published On 2019-10-24 16:16 GMT   |   Update On 2019-10-24 16:16 GMT
காஷ்மீரில் வெளிமாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் 2 பேர் பயங்கரவாதிகளால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதையடுத்து அங்கு அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் விளையும் ஆப்பிள் பழங்களை ஏற்றிச்செல்வதற்காக வெளிமாநிலத்தை சேர்ந்த லாரிகள் சில அங்குள்ள சோபியான் பகுதிக்கு வந்தது.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அங்கு நின்று கொண்டிருந்த லாரி டிரைவர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 2 லாரி டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு நபர் படுகாயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் ஆப்பிள் ஏற்ற வந்திருந்த 3 லாரிகளை தீயிட்டுக் கொளுத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் காயமடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஷ்மீரில் வெளிமாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெறுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News