செய்திகள்
மனோகர் லால் கட்டார்

அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2019-10-24 12:48 GMT   |   Update On 2019-10-24 12:48 GMT
அரியானா மாநிலத்தின் முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், காங்கிரஸ் வேட்பாளரைவிட 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சண்டிகர்:

90 இடங்களைக் கொண்ட அரியானாவில் முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் (பா.ஜ.க.), முன்னாள் முதல் மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா (காங்கிரஸ்), அபய் சிங் (இந்திய தேசிய லோக்தளம்), ஜனநாயக் ஜனதா தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்பட 1,169 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இந்த மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அரியானாவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே ஆட்சி அமைக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், அரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், காங்கிரஸ் வேட்பாளர் தர்லோச்சன் சிங்கை விட 45 ஆயிரத்து 188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கிடையே, மனோகர் லால் கட்டார் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.
Tags:    

Similar News