செய்திகள்
விசாகப்பட்டினத்தில் மழை

வடக்கு கடலோர ஆந்திராவில் கனமழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2019-10-23 10:30 GMT   |   Update On 2019-10-23 10:30 GMT
வடக்கு கடலோர ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விஜயவாடா:

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி உள்ளன.

கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வடக்கு கடலோர ஆந்திர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News