செய்திகள்
பாகிஸ்தான் பாடகி ரபி பிர்சாடா

மோடி மீது தற்கொலைப்படை தாக்குதல்? - டுவிட்டரில் ‘பல்பு’ வாங்கும் பாகிஸ்தான் பாடகி

Published On 2019-10-23 08:41 GMT   |   Update On 2019-10-23 10:34 GMT
மோடி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த விரும்புவது போல் காட்சி தரும் பாகிஸ்தான் பாடகியின் இந்த உடையை அந்நாட்டின் தேசிய உடையாக இம்ரான் கான் அங்கீகாரம் செய்வாரா?
புதுடெல்லி:

பாம்பு, முதலைகளை வைத்து மோடியை கொல்ல இருப்பதாக முன்னர் மிரட்டிய பாகிஸ்தான் பாடகி தற்போது பிரதமர் மோடி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரபி பிர்சாடா. பாப் இசை பாடகியான இவர் கடந்த மாதம் 5-ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் முதலைகள், பாம்புகளை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
 
நான் காஷ்மீர் பெண். இந்த பரிசுகள்(பாம்புகள், முதலைகள்) மோடிக்காகத்தான். நீங்கள் காஷ்மீர் மக்களை மிகவும் துன்புறுத்துகிறீர்கள். இதற்காக இவற்றை தயாராக வைத்துள்ளேன்.




நீங்கள் நரகத்தில் சாவதற்கு தயாராக இருங்கள். என் நண்பர்களாகிய இவர்கள் (பாம்புகள், முதலைகள்)  உங்களுக்கு விருந்து வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் ஒரு பாடலையும் அவர் பாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, ரபி  சட்ட விரோதமாக வன விலங்குகளை வீட்டில் வைத்திருப்பதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோர்ட்டும் ரபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.

இந்த சர்ச்சை அடங்கும் முன்னர் மீண்டும்  ரபி பிர்சாடா நேற்று ஒரு புகைப்படத்தை அடிக்குறிப்புடன் வெளியிட்டுள்ளார்.

தற்கொலைப்படை தாக்குதல்களில் மனித குண்டாக செயல்படும் நபரைப்போல் தனது ஆடை முழுவதும் வெடிகுண்டுகளை கட்டியவாறு இந்த புகைப்படத்தில் தோன்றும் ரபி பிர்சாடா, ’மோடி ஒரு ஹிட்லர். காஷ்மீரின் மகளான எனது விருப்பம்’ என குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில், பாகிஸ்தானியர்கள் அவரை வாழ்த்து மழையிலும் இந்தியர்கள் வசவு மழையிலும் குளிப்பாட்டி வருகின்றனர்.

இவர்களில் அதிகமாக எதிர்வினை ஆற்றியவர்கள் இந்தியர்கள் என்பது விமர்சனங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது.

’ஆஹா! பாகிஸ்தான் தேசிய உடையில் நீ அழகாக இருக்கே’ என்று இந்தியாவை சேர்ந்த ஒருவரும் இதே ஆடையை பாகிஸ்தான் நாட்டின் தேசிய உடையாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அங்கீகரிக்க வேண்டும் என மற்றொருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News