செய்திகள்
சசிகலா

பெங்களூரு சிறையின் சமுதாய வானொலிக்கு சசிகலா நன்கொடை

Published On 2019-10-23 05:18 GMT   |   Update On 2019-10-23 05:18 GMT
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் நடத்த உள்ள சமுதாய வானொலிக்கு சசிகலா கணிசமான ஒரு தொகையை நன்கொடையாக அளித்து உள்ளார்.
பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவுக்கு இதுவரை 2 முறை பரோல் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் கர்நாடகா உருவான நவம்பர் 1-ந் தேதி அவர் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் நன்னடத்தை விதிகள் அவருக்கு பொருந்தாது என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் அவர் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் ஆரம்பிக்க இருக்கும் சமுதாய வானொலிக்காக சிறை கைதிகள் அனைவரிடமும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. வானொலிக்காக சசிகலாவும் கணிசமான ஒரு தொகையை நன்கொடையாக அளித்து உள்ளார்.
Tags:    

Similar News