செய்திகள்
ராஜ்நாத் சிங்

இந்தியா மீது கண் வைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவம் தயார்: ராஜ்நாத் சிங்

Published On 2019-10-23 02:31 GMT   |   Update On 2019-10-23 02:31 GMT
இந்தியா மீது தீயநோக்கத்துடன் கண் வைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வலிமை, ராணுவ படைகளுக்கு உள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
புதுடெல்லி :

டெல்லியில், இந்திய கடற்படை கமாண்டர்களின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, இந்தியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித் அகமது கூறியது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அதற்கு ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

இந்தியா எப்போதும் ஆக்கிரமிப்பாளராக இருந்தது இல்லை. எந்த நாட்டையும் தாக்கியது இல்லை, மற்ற நாடுகளுக்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக்கூட பறித்துக்கொண்டது இல்லை. இதுதான் இந்தியாவின் குணாதிசயம்.



ஆனால், தீய நோக்கத்துடன் இந்தியா மீது கண் வைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வலிமை, நமது ராணுவ படைகளுக்கு இருக்கிறது.

நமது கடற்படைகளின் கைகளில் கடல் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். 2008-ம் ஆண்டு கடல்மார்க்கமாக வந்த பயங்கரவாதிகள், மும்பையில் தாக்குதல் நடத்தியது போன்ற சம்பவம், மீண்டும் நடக்கக்கூடாது என்பதில் கடற்படை உறுதியாக இருக்கிறது. அதற்காக விழிப்புடன் உள்ளது. கடற்படை, முற்றிலும் உள்நாட்டுமயத்தை நோக்கி நடைபோடுகிறது. கப்பல்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான சாதனங்கள், இந்திய தயாரிப்புதான்.

ராணுவ தளவாட இறக்குமதியை குறைக்குமாறு முப்படைகளும் வலியுறுத்தி வருகின்றன. சவால்களை சந்திக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முப்படைகளும் ஆர்வமாக உள்ளன.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
Tags:    

Similar News