செய்திகள்
பிரதமர் மோடி அபிஜித் பானர்ஜி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி சந்திப்பு

Published On 2019-10-22 08:35 GMT   |   Update On 2019-10-22 08:35 GMT
பிரதமர் நரேந்திர மோடியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற சாதனையாளர் அபிஜித் பானர்ஜியும் இன்று சந்தித்து உரையாடினர்.
புதுடெல்லி: 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பேராசிரியர் அபிஜித் பானர்ஜி. உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக அவருக்கும், அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோவுக்கும் சமீபத்தில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

கொல்கத்தாவை சொந்த ஊராக கொண்ட அபிஜித் பானர்ஜி, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து, 1983-ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். இரு தினங்களுக்கு முன்பு அபிஜித் பானர்ஜி டெல்லி வந்தார்.

இந்நிலையில், நோபல் பரிசு வென்ற சாதனையாளருடன் உரையாடியதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு ஆரோக்கியமானதாக இருந்தது. பல்வேறு விஷயங்களை குறித்து இருவரும் விரிவாக பேசினோம். மனிதகுல முன்னேற்றம் மீதான அவரது ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது. அவருக்கு நோபல் பரிசு வென்றது குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News