செய்திகள்
டிராக்டர்களை பாலமாக அமைத்து வாக்களித்த மக்கள்

டிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்

Published On 2019-10-21 13:53 GMT   |   Update On 2019-10-21 13:53 GMT
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியை சுற்றிலும் கனமழை காரணமாக சேறும், சகதியுமாக இருந்ததால் வாக்காளர்கள் டிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றினர்.
புனே:  

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும், அரியானாவில் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதற்கிடையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேட்பாளர்கள் ஏராளமானோர் தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்கை செலுத்திவிட்டு வந்தனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் புனே மாவட்டத்திற்கு உள்பட்ட பாராமதி என்ற பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் வாக்களிக்க வாக்குச் சாவடி அமைக்கப்படிருந்தது. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது.



இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் டிராக்டர்களை வரிசையாக நிற்கவைத்து வாக்குச்சாவடி வரை பாலம் அமைத்தனர். அந்த டிராக்டர் பாலத்தின் மீது ஏறிச்சென்று வாக்குச்சாவடியை அடைந்த வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

அதே போன்று கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அம்மாநிலத்தின் எர்ணாகுளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.  கனமழை காரணமாக வாக்குச்சாவடி முழுவதும் வெள்ள நீரில் ழூழ்கி இருந்தது. ஆனாலும், வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்து சென்றனர்.
Tags:    

Similar News