செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

இலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்

Published On 2019-10-20 16:26 GMT   |   Update On 2019-10-20 16:26 GMT
பாஜக ஆட்சிக்கு வந்தால் மின்சாரத்திற்கான மானியத்தை திரும்பப் பெறுவோம் என்று கூறிய பாஜக-வுக்கு நன்றி என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு பொது மக்களுக்கு 200 யுனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறது. இதற்கிடையில் பா.ஜனதா தலைவர் விஜய் கோயல், டெல்லியில்  பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மின்சாரத்திற்கான மானியத்தை திரும்பப் பெறுவோம் என்று கூறியதாக தெரிகிறது.

இதன் மூலம் பா.ஜனதாவின் நோக்கம்  தெரிய வந்ததற்கு நன்றி என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘விஜய் கோயல் பா.ஜனதாவின் பெரிய தலைவர்களில் ஒருவர். பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 4 ஆயிரம் யுனிட்டுகள் இலவசமாக வழங்கப்படுவது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக தெரியவில்லை.

அதேசமயத்தில் பொது மனிதர் 200 யுனிட் இலவசமாக பெறும்போது அவருக்கு பெரிய விஷயமாகத் தெரிகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்கான நோக்கத்தை பா.ஜனதா தெளிவாக எடுத்து விட்டது என்பதை தெரிவித்ததால், அவர்களுக்கு நன்றி.

அவர்கள் மின்சாரத்திற்கான மானியத்தை நீக்கினால், கடந்த முறை மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். அந்தத் தொகுதிகளையும் சேர்த்து அனைத்திலும் டெபாசிட் இழப்பார்கள் என்று நான் சவாலாக சொல்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News