செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி தேவஸ்தான மண்டபங்களில் திருமணம் செய்வோர் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்

Published On 2019-10-19 11:13 GMT   |   Update On 2019-10-19 11:13 GMT
திருப்பதி தேவஸ்தான மண்டபங்களில் திருமணம் செய்வோர் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருமலை:

திருப்பதியில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பேசியதாவது:-

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை என்றால் திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுக்கலாம்.

அங்கு விடுதிகளை போல் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

திருமலையில் கவுஸ்தபம், மங்களம் பாய் காட்டேஜ் நம்பர்-34, மத்திய வரவேற்பு மையம், விருந்தினர் பங்களா விடுதி ஆகியவற்றில் அறைகள் ஒதுக்கீடு செய்வது சுவைப் கருவி மூலமாக மேற்கொள்ளப்படும்.

திருமலையில் பத்மாவதி விருந்தினர் மாளிகை, மங்களம் பாய் காட்டேஜ், விருந்தினர் பங்களா விடுதி, சப்தகிரி சூராபுரம் தோட்டம், ராம்பகீதா ஆகிய விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்களின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அறையை பெற்று கொள்ளலாம்.

திருமலையில் சாதாரண பக்தர்கள் திருமணம் செய்து கொள்ள சங்கு மிட்டா காட்டேஜில் 6 திருமண மண்டபங்கள், ஆழ்வார் டேங் காட்டேஜில் ஒரு திருமண மண்டபம், விருந்தினர் பங்களா விடுதியில் 3 திருமண மண்டபங்கள் உள்ளன.

அதில் 90 நாட்களுக்கு முன்பே மணமகன், மணமகள் மற்றும் இருவரின் பெற்றோர் ஆகியோர் நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

ஆழ்வார் டேங் காட்டேஜில் உள்ள திருமண மண்டபத்துக்கு ரூ.500 கட்டணமும், விருந்தினர் பங்களா விடுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு ரூ.200 கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.

மணமக்கள், அவர் தம் பெற்றோருடன் நேரில் வந்து மத்திய வரவேற்பு மையம்-1 மற்றும் வரவேற்பு மைய உதவி அதிகாரி ஆகியோரிடம் இருப்பிடம், வயது சான்று உள்ளிட்டவைகளை சமர்ப்பித்து முன்பதிவு செய்யலாம்.

தேவஸ்தான திருமண மண்டபங்களில் திருமணம் செய்வோர் கண்டிப்பாக இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வேற்று மதத்தினர் திருமலை- திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்களில் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News