செய்திகள்
கம்லேஷ் திவாரியின் உறவினர்கள்

முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் வரை திவாரி உடலை எரிக்க மாட்டோம்- உறவினர்கள் உறுதி

Published On 2019-10-19 03:25 GMT   |   Update On 2019-10-19 03:25 GMT
உத்தர பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவரின் உடலை, முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் வரை எரிக்க மாட்டோம் என உறவினர்கள் கூறி உள்ளனர்.
லக்னோ

உத்தர பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி (வயது 45). இவர் இதற்கு முன்பு இந்து மகாசபையில் முக்கிய பொறுப்பில் இருந்தார். நேற்று மதியம் லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள அவரது வீட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சுட்டுக்கொன்றனர்.

இதுதொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திவாரியை சந்திக்க வந்த நபர்கள் அவரை சுட்டுக்கொன்றிருப்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த படுகொலைக்கு இந்து மகாசபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



இந்நிலையில், திவாரியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை சீதாப்பூர் மாவட்டம் மஹ்முதாபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. ஆனால் உடனடியாக இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரும் வரை உடலை எரிக்க மாட்டோம் என உறவினர்கள் கூறி உள்ளனர். 

திவாரியின் மனைவி மிகுந்த சோகத்தில் இருக்கிறார். அவர் தன் கணவனைப் பிரிந்து தன்னால் வாழ முடியாது என்றும், தீக்குளித்து சாகப்போவதாகவும் கூறியது உறவினர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News