செய்திகள்
மன்மோகன் சிங்

ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கிய விதம் தவறானது - மன்மோகன் சிங்

Published On 2019-10-17 13:08 GMT   |   Update On 2019-10-17 13:08 GMT
ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நீக்கிய விதம்தான் தவறானது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் சரியானது அல்ல. காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு ஆதரவாக தான் வாக்களித்தது. அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை.

ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நீக்கிய விதம்தான் தவறானது. 370-வது பிரிவு நீக்கம் தற்காலிகமானது என நம்புகிறோம்.

ஆனால் ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அது ஜம்மு காஷ்மீர் மக்களின் நன்மதிப்போடு நிகழவேண்டும். பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு இறங்குமுகத்தில் செல்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் தொடர்ந்து உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News