செய்திகள்
மகாராஷ்டிரா போலீசார் (கோப்பு படம்)

சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியின் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... ஆனால்?

Published On 2019-10-17 12:28 GMT   |   Update On 2019-10-17 12:28 GMT
மகாராஷ்டிராவில் சப்-இன்ஸ்பெக்டரை கொன்றவரின் இருப்பிடத்தை 27 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து அவரை கைது செய்ய போலீசார் சென்ற போது குற்றவாளி பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்டார் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் கல்யான் நகரில் உள்ள மகாத்மா ஃப்லி சௌக் காவல் நிலையத்தில் 1992-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் மகேந்திர சிங் படேல். 

அவரை ஒரு வாக்குவாதத்தின் போது 1992 ஜூலை 23-ம் தேதி இக்பால் அலிஸ் நன்ஹிகான் என்ற நபர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுவிட்டார்.

இதையடுத்து, இக்பால் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் குற்றவாளி போலீசாரின் வலையில் சிக்காமல் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதிகளில் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இந்த கொலை வழக்கு தீர்த்துவைக்கப்படாமல் நிலுவையிலேயே இருந்தது.



இந்நிலையில், தானே போலீசார் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விசாரணையை சமீபத்தில் தீவிரப்படுத்தினர். அப்போது, 1992-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர சிங் படேலை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற இக்பால் கடைசியாக ஜசோனா என்ற கிராமத்தில் பதுங்கி இருந்ததற்கான தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து இக்பாலை கைது செய்ய அந்த கிராமத்திற்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்த கிராமத்தில் விசாரணை மேற்கொண்டபோது குற்றவாளி இக்பால் ஏழு வருடங்களுக்கு முன்பு கடந்த 2012-ம் ஆண்டே உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார் என்ற உண்மை வெளிவந்தது. 

இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த போலீசார் பல வருடங்களாக நிலுவையில் இருந்த கொலை வழக்கை முடித்து வைக்க முன்வந்துள்ளனர்.
Tags:    

Similar News