செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி கோவிலை வெளிநாட்டு பக்தர் செல்போனில் படம் பிடித்ததால் பரபரப்பு - விசாரணை நடத்த உத்தரவு

Published On 2019-10-17 05:13 GMT   |   Update On 2019-10-17 05:13 GMT
திருப்பதியில் கோவில் கோபுரத்தை வெளிநாட்டு பக்தர் செல்போனில் படம் பிடித்ததையடுத்து தீவிர விசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரி பறக்குடை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருமலை:

திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, வெளிநாட்டு பக்தர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களில் சிலர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஏழுமலையானை வழிபட்டு விட்டு வெளியே வந்த அவர்கள் தீர்த்தம் வழங்கி, சடாரி ஆசீர்வாதம் செய்யக் கூடிய இடத்திற்கு வந்தனர். அப்போது அவர்களில் வந்த வெளிநாட்டு பக்தர் ஒருவர் தான் கொண்டு வந்த செல்போனால் கோவில் கோபுரங்களை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

அதை, பார்த்த தேவஸ்தான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். விரைந்து வந்து, வெளிநாட்டு பக்தரை பிடித்து, தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், செல்போன் கொண்டு வரக்கூடாது என்பது தனக்குத் தெரியாது எனக் கூறினார்.

அந்தப் பக்தருக்கு அதிகாரிகள் கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர். மீண்டும் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது எனக் கூறி எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு சோதனைக்கு பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் சோதைனையை மீறி வெளிநாட்டு பக்தர் ஒருவர் செல்போன் எடுத்து வந்து கோவிலை படம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் பாதுகாப்பில் குளறுபடி உள்ளதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சோதனையில் ஏற்பட்ட கவனக்குறைவால் பக்தர்கள் செல்போன் கொண்டு வருகிறார்கள்.

இதேபோல், பக்தர்கள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவினால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்குமோ என்பதால் இது பற்றி தீவிர விசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரி பறக்குடை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News