செய்திகள்
கோப்பு படம்

அரியானா தேர்தலில் 481 கோடீசுவரர்கள் - ஆய்வில் புதிய தகவல்

Published On 2019-10-15 09:19 GMT   |   Update On 2019-10-15 09:19 GMT
அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 481 பேர் கோடீசுவரர்கள் என்று ஜனநாயக சீர்திருத்த கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அந்த ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, அரியானாவில் வருகிற 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி ஜனநாயக சீர்திருத்த கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களில் கூறியுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில், அரியானா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 481 பேர் கோடீசுவரர்கள் என்று தெரிய வந்தது. பாரதிய ஜனதா வேட்பாளர்களில் 79 பேர் கோடீசுவரர்கள்.

அது போல காங்கிரஸ் வேட்பாளர்களிலும் 79 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள். ஜனநாயக ஜனதா கட்சியில் 62 பேர், இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் 50 பேர், பகுஜன் சமாஜ் கட்சியில் 34 பேர் கோடீசுவரர்கள்.

கோடீசுவர வேட்பாளர்களின் சராசரி பண மதிப்பு அளவு 4.54 கோடி ரூபாயாகும். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது 563 வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக இருந்தனர்.

இந்த தடவை கோடீசுவர வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே சமயத்தில் கிரிமினல் குற்றப்பிரிவு கொண்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை கடந்த தடவையை விட அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News