செய்திகள்
உச்ச நீதிமன்றம்

சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய பொது நல மனு தள்ளுபடி

Published On 2019-10-14 10:31 GMT   |   Update On 2019-10-14 10:31 GMT
சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

ஆதார் எண்ணை சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சமூக ஊடக தளங்களை மிஞ்சும் வகையிலான போலி கணக்குகளை தடுப்பதற்கும், போலி மற்றும் கட்டண செய்திகளின் அச்சுறுத்தலை சரிபார்க்கவும் சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லா விஷயங்களுக்கும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

“எல்லாவற்றிற்கும் உச்சநீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை. இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மனுதாரர் வேண்டுமானால் அங்கு சென்று முறையிடலாம்” என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
Tags:    

Similar News