செய்திகள்
பாஜக

அரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி - பாஜக தேர்தல் வாக்குறுதி

Published On 2019-10-14 09:37 GMT   |   Update On 2019-10-14 09:37 GMT
அரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

சண்டிகார்:

மராட்டியம், அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

அரியானா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

பாரதிய ஜனதா செயல் தலைவர் ஜே.பி. நட்டா, முதல்-மந்திரி மனோ கர்லால் கத்தார் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டனர். அதில், பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* அனைத்து விவசாய பொருட்களும் குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலையில் அரசு மூலம் கொள்முதல் செய்யப்படும்.

* தாழ்த்தப்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை அடமான உத்தரவாதம் அல்லாத கடன் வழங்கப்படும்.

 


* 25 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி செலவிடப்படும்.

* மாநில தொழிற்சாலைகளில் 95 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சட்டம்.

* முதியோர் உதவித் தொகை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

* 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு வழங்கப்படும்.

* 2000 சுகாதார மையங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

* 1000 இடங்களில் விளையாட்டு பயிற்சி மையம் உருவாக்கப்படும்.

* ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும்.

* மாணவிகள் பயணம் செய்வதற்காக இளஞ்சிவப்பு நிறத்தில் தனி பஸ்கள் இயக்கப்படும்.

* இளம் பெண்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படும்.

* பெண்களுக்கு உதவுவதற்காக தனி உதவி மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News