செய்திகள்
விபத்தில் சிக்கி உருக்குலைந்து கிடக்கும் கார்

மரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி

Published On 2019-10-14 04:27 GMT   |   Update On 2019-10-14 04:27 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் தேசிய ஹாக்கி வீரர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் அருகே தேசிய ஹாக்கி வீரர்கள் இன்று அதிகாலையில் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை  இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்னானது.

இதில், காரில் இருந்த 4 ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Tags:    

Similar News