செய்திகள்
சென்னையில் சீன அதிபருக்கு நேற்று செண்டை மேளத்துடன் வரவேற்பு

ஆற்றல் மிக்க தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்: மோடி நெகிழ்ச்சி

Published On 2019-10-12 09:25 GMT   |   Update On 2019-10-12 09:25 GMT
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை:

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரும் சந்தித்து பேசினர்.

பின்னர், சென்னையில் இருந்து சீன அதிபர் தனி விமானம் மூலம் நேபாளம் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவடந்தை புறப்பட்டு சென்றார்.



சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக, இந்த பயணம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 'தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News