செய்திகள்
வைரல் புகைப்படம்

தாதா சோட்டா ராஜனுடன் நிற்பது பிரதமர் மோடியா? வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி

Published On 2019-10-11 06:53 GMT   |   Update On 2019-10-11 06:53 GMT
நிழல் உலக தாதா சோட்டா ராஜனுடன் பிரதமர் நரேந்திர மோடி நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதன் உண்மை பின்னணியை பார்ப்போம்.



பிரதமர் நரேந்திர மோடியுடன் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படம் போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரியும் நிலையில், பலர் இது உண்மையான புகைப்படம் என பகிர்ந்து வருகின்றனர்.

இதே புகைப்படம் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் என கூறியும் பகிரப்படுகிறது. வைரல் புகைப்படத்தில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக தீபக் நிகல்ஜே அறிவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஒரே புகைப்படம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஃபட்னாவிஸ் என சோட்டா ராஜனுடன் நிற்பதாக கூறி இரண்டு புகைப்படங்களாக பகிரப்படுகின்றன. இவற்றில் இரண்டாவது புகைப்படத்தில் செய்தி குறிப்பு ஸ்கிரீன்ஷாட் ஆகும்.



புகைப்படத்தை வலைதளத்தில் ரிவர்ஸ் சர்ச் செய்ததில், இந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதே புகைப்படம் செப்டம்பர் 25, 2014 தேதியில் தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. செய்தியில் பிரதமர் மோடி 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களமிறங்குகிறார் என தலைப்பிடப்பட்டிருக்கிறது. செய்தியில் தற்சமயம் வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது.

அதன்படி உண்மை புகைப்படத்தில் நிற்கும் நபர் வெட்டி எடுக்கப்பட்டு, அதே இடத்தில் மற்றொரு நபர் பொருந்தவைக்கப்பட்டது தெளிவாக தெரிகிறது. தனியார் நிறுவன செய்தி குறிப்பில், நரேந்திர மோடிக்கு நன்கு அறிமுகமான சுரேஷ் ஜெய்னி ஜெ.எஃப்.கே. விமான நிலையத்தில் அவரை வரவேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி இந்த புகைப்படம் 1993 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். நரேந்திர மோடி முதல் முறையாக அமெரிக்கா வந்த போது அவரை வரவேற்க நான் விமான நிலையம் சென்று அவரை வரவேற்றேன் என ஜெய்னி தெரிவித்திருக்கும் செய்தியும் ரெடிஃப் தளத்தில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் புகைப்படம் போலியானது என உறுதியாகியுள்ளது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News