செய்திகள்
பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் காஷ்மீர் பற்றி பேசும்போது பிரதமர் மோடி ஹாங்காங் பற்றி பேச மறுப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

Published On 2019-10-10 17:11 GMT   |   Update On 2019-10-10 17:11 GMT
காஷ்மீர் குறித்த சீன அதிபர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரதமர் மோடி ஹாங்காங் விவகாரம் குறித்து பேச மறுப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுடெல்லி:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சீன அதிபர் காஷ்மீர் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தனது அரசு பாகிஸ்தானின் நலனுக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக மற்றும் பிரதமர் மோடி இந்தியாவின் உள்விவகாரங்களை பிற நாட்டினர் விவாதிப்பதை தடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியாவது:-

சீன பிரதமர் ஜி ஜின்பிங் தான் காஷ்மீர் நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்பதாக கூறியுள்ளார். அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹாங்காங் போராட்டம், ஷின்ஷியான் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், திபெத் மக்களுக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறைகள், தென் சீன கடல் பரப்பில் செலுத்திவரும் ஆதிக்கம் என சீனா மேற்கொண்டுவரும் அத்துமீறல் நடவடிக்கைகளை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என பிரதமர் மோடி கேள்வி கேட்க மறுப்பது ஏன்?



காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக சீனா குற்றம் சாட்டும் அளவுக்கு சீனாவில் ஷின்ஷியான் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம் மீது நடத்தப்படும் மனித உரிமைகள் மீறல்களை பற்றி இந்திய அரசு உலக அரங்கில் எடுத்துரைக்கவில்லை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கவேண்டுமேன பேசிவரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரின் மீதி பகுதிகளை மீட்பது குறித்து ஒரு பேச மறுப்பது ஏன்?

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News