செய்திகள்
சிறையில் பறிமுதல் செய்யப்பட்ட கத்திகள்

பெங்களூரு சிறையில் சோதனை- கைதிகள் அறைகளில் இருந்து 37 கத்திகள் பறிமுதல்

Published On 2019-10-09 07:26 GMT   |   Update On 2019-10-09 07:26 GMT
பெங்களூரு சிறைச்சாலையில் இன்று நடத்தப்பட்ட சோதனையின்போது, கைதிகளின் அறைகளில் இருந்து 37 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளளன.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், வெளியில் உள்ளவர்களோடு சரளமாக பேச செல்போன்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் பெங்களூரு மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று சிறைக்கு சென்று கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் 37 கத்திகள், கஞ்சா புகைக்கும் கருவிகள், செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதிகளுக்கு இந்த பொருட்களை சப்ளை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News