செய்திகள்
காங்கிரஸ்

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்- காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி

Published On 2019-10-09 02:20 GMT   |   Update On 2019-10-09 02:20 GMT
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை :

மகாராஷ்டிராவில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் படுதோல்வி அடைந்து ஆட்சியை பா.ஜனதாவிடம் பறிகொடுத்தன. இந்த நிலையில், வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் சிறிய கட்சிகளும் இடம் பெற்று உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளன. அந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.

இதன்படி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் ஆக்கப்படும். அனைத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 500 சதுர அடி பரப்பளவு வரை உள்ள வீடுகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகன ஓட்டிகளிடம் அதிகமாக வசூலிக்கப்படும் அபராத தொகை குறைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டப்படும். மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்று உள்ளன.
Tags:    

Similar News