செய்திகள்
துர்கா பூஜையில் நடனமாடும் நுஸ்ரத் ஜகான்

துர்கா பூஜையில் கலந்துகொள்வதா? - எம்.பி. யான நடிகை மீது மதத்தலைவர் பாய்ச்சல்

Published On 2019-10-07 12:32 GMT   |   Update On 2019-10-07 12:32 GMT
துர்கா பூஜையில் கலந்துகொண்டதன் மூலம் இஸ்லாம் மதத்தையும் முஸ்லிம்களையும் வங்காள மொழி நடிகை நுஸ்ரத் ஜகான் அவமதித்துவிட்டதாக மதத்தலைவர் குற்றச்சாட்டியுள்ளார்.
கொல்கத்தா:

வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான்(29), திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பஷீர்ஹட் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். இஸ்லாம் மதத்தை சேர்ந்த இவர் நிகில் ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில்,  நுஸ்ரத் ஜஹான் தனது கணவருடன் இணைந்து நேற்று துர்கா பூஜை கலந்து கொண்டார். கழுத்தில் தாலியும் நெற்றியில் குங்குமமும் வைத்திருந்த அவர் பூஜையில் கலந்து கொண்ட பின்னர் அங்கிருந்த இசை கலைஞர்களின் வாசிப்பிற்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தார். அவர் துர்கா பூஜையில் கலந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



இந்நிலையில், நுஸ்ரத் ஜஹான் இஸ்லாம் மதத்தை அவமதித்து விட்டதாக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இஸ்லாம் மதத்தலைவர் முப்தி அசாத் குஷ்மி கூறுகையில், 'நுஸ்ரத் ஜஹான் இஸ்லாம் மதத்தை சாராத ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆகையால், அவர் தனது பெயரையும் மதத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். 

இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு அந்த மதத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் எவரும் இஸ்லாம் மதத்துக்கு தேவையில்லை. இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டையே இஸ்லாமிய மதம் போதிக்கிறது. அந்த கோட்பாட்டை மீறி  நஸ்ரத் ஜஹான் இஸ்லாம் மதத்தை அவமதித்துவிட்டார்’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News