செய்திகள்
ராம்நாத் கோவிந்த் - ஷேக் ஹசினா சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்திப்பு

Published On 2019-10-05 14:09 GMT   |   Update On 2019-10-05 14:09 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா தலைநகர் டெல்லியில் இன்று மாலை சந்தித்தார்.
புதுடெல்லி:

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா டெல்லியில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
 
வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா முன்னிலையில் 7 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியாவுக்கு பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி செய்வது உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர் மோடியும் ஷேக் ஹசினாவும் தொடங்கி வைத்தனர்.

இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்குமான நல்லுறவு அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி இந்த நல்லுறவு இருநாட்டு மக்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று மாலை சந்தித்தார். அவர்கள் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது இருநாட்டு தூதரக அதிகாரிகளும் உடனிருந்தனர்.
Tags:    

Similar News